கூற்று:
“100 வருச கோயிலை இடிச்சிருக்கேன் சரஸ்வதி கோயில், லட்சுமி கோயில், பார்வதி கோயில் இந்த மூனு கோயிலை நான் தான் இடிச்சேன். எனக்கு ஓட்டு வராதுன்னு தெரியும். ஓட்டு எப்படி வரவைக்கிறதுனும்னு தெரியும்” எனப் பரப்பப்படும் டி.ஆர். பாலு பேசும் காணொலி
சரிபார்ப்பு:
Hindumunnani 2.0 YouTube shorts பக்கத்தில், கோயிலை இடிச்சதே நாங்க தான். எங்களுக்கு ஓட்டுப் போடுங்க. #வேண்டாம்_திமுக #modiagainin2024 எனத் தலைப்பிடப்பட்ட Shorts காணொலி 1லட்சத்து 38 ஆயிரம் பார்வைகளைக் கடந்துள்ளது.
அக்காணொலியில் முதலில் பேசும் நபர் ஒருவர் “டி.ஆர். பாலு உங்களுக்கு கேட்குற கேள்வி தான் இது” எனக் கூறியதும் “100 வருச கோயிலை இடிச்சிருக்கேன் சரஸ்வதி கோயில், லட்சுமி கோயில், பார்வதி கோயில் இந்த மூனு கோயிலை நான் தான் இடிச்சேன். எனக்கு ஓட்டு வராதுன்னு தெரியும். ஓட்டு எப்படி வரவைக்கிறதுனும்னு தெரியும்” என டி.ஆர். பாலு மேடையில் பேசும் காணொலி ஒன்று இந்தக் காணொலியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இக்காணொலியில் பேசத் தொடங்கிய நபர் “நீ பெரிய ஆம்பளை மாதிரி ஆம்பள சிங்கம் மாதிரி பேசினல்ல, கோயில்களை எல்லாம் இடிச்சது எல்லாம் நாங்க தான், எங்க ஆட்சில தான் இடிச்சோம். நாங்க என்ன சொல்லனும்னு சொன்னோம்னா ஓட்ட போட்றுவாங்க, அப்படின்னு சொன்னல்ல டி.ஆர்.பாலு இப்போ நான் சொல்றேன் தேர்தலுக்குப் போய் பிச்சை எடுக்கப்போவில்ல வீடு வீடா ஓட்டு கேட்க, கோயிலை இடிச்சது நாங்க தான். ஆனா எப்படியோ உங்கக்கிட்ட இருந்து என்னால ஓட்டு வாங்க முடியும். அப்படின்னு சொல்லி ஒன்னோட தேர்தல் அறிக்கையிலேயோ இல்ல, நீ போடுற Handbit நோட்டீஸ்லயோ, கோயிலை இடிச்சது நாங்கத் தான், கோயிலை இடிச்சது நாங்கத்தான், அப்படி அன்னைக்கு பேசினில ஆம்பள சிங்கம் மாதிரி, இன்னைக்குப் பேசு டி.ஆர்.பாலு அவர்களே” எனப் பேசி முடித்திருக்கிறார்.
இந்தக் காணொலியில் கூறப்பட்டதின் உண்மைத்தன்மையை ஆராயத் தொடங்கியது The Media Monitoring. YouTube ல் “100 வருச கோயில்களை இடிச்சிருக்கேன்” எனத் தேடிய போது, 30, ஜனவரி 2023 அன்று புதிய தலைமுறை தொலைக்காட்சியின் YouTube பக்கமான PuthiyathalaimuraiTV பக்கத்தில் 100 வருஷ கோயிலை இடிச்சிருக்கேன்…என்ன! – டி.ஆர். பாலு பேசியதன் முழு விவரம் | TR Balu | PTS எனத் தலைப்பிடப்பட்ட 6நிமிடங்கள் 44 நொடிகள் நீளமுள்ள காணொலி ஒன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அக்காணொலியில் “மனித நம்பிக்கைகள் இப்ப சொல்றாங்க belief எல்லா சொல்வீங்க கரக்ட். மனித நம்பிக்கைகள் எப்படிப்பா இருக்கனும் மனித நம்பிக்கைகள். 100 வருச கோயில்களை இடிச்சிருக்கேன். இதே டி.ஆர். பாலு என்னுடைய இன்னொரு துறை சார்பாக நான்கு வழிச்சாலை அமைக்கின்ற நேரத்தில் 100 வருடக் கோயில், West Bengal ல 100 வருசம் Mosque(பள்ளிவாசல்) ஐ இடிச்சிருக்கேன். கோயிலை இடிச்சிருக்கேன், Mosqueஐ இடிச்சிருக்கேன், மதா கோயிலை இடிச்சிருக்கேன். வழிபடுகின்ற ஸ்தலங்களையெல்லாம் இடிக்கின்ற பொழுது மக்கள் வந்தாங்க, West Bengal ல முடிசூடா மன்னனாக இருந்த பல ஆண்டு காலம் முதலமைச்சராக இருந்த ஜோதிபாசு அவர்கள் என்னை அழைத்தார்கள். ஐடக்ஸ் பில்டிங்க்கு நேரா போனேன். போயிட்டு என்னன்னு கேட்டேன், அவங்க MPs எல்லாம் வந்திருந்தாங்க. அந்த MPs லாம் போர்க்குணம் அதிகமாக இருந்தவர்கள் உங்களுக்குத் தெரியும் அருணன் கோவிச்சிக்கக் கூடாது, இருக்காரா.. போயிட்டாரா.. போனது வசதியா போச்சு..அன்னைக்கு மிக மிக வேகமாகப் பேசுபவர்கள் நம்முடைய பாராளுமன்றத்தில் West Bengal ல இருந்தவங்க ஏன்னா சேதுசமுத்திர திட்டத்துக்காக செய்கின்ற போது File யே புடிச்சு இழுத்துட்டாங்க, Bill பாஸ் பண்ண விடல.Maritime University… Maritime University கொண்டு வந்தப்போ நிறைவேத்துல ஒரு வருசம் delay ஆச்சு அவ்வளவு தான். அதுக்கு அப்புறம் அவங்க கோபமெல்லாம் எல்லாம் இது பண்ணி சரி பண்ணி அப்புறம் கடைசில திருப்பி university கொண்டு வந்தோம்னு வச்சுக்கோங்க.. அவரு அன்னிக்கு ஜோதிபாசு கேட்குறாரு என்ன பாலு 100 வருசம் இருந்த Mosque லாம் இடிச்சிட்டா உனக்குத் தான் தெரியுமே அரசியல்வாதி vote bank ஒருபக்கம் பாதிக்கும் மத நம்பிக்கை எல்லாம் பாதிக்கும் இது சரியா நீ செய்யுறதுன்னு என்னைக் கேட்டார் பக்கத்துல உட்கார வச்சி… நான் சொன்னேன் அய்யா நீங்க வந்து அரசியல்ல எல்லாருக்கும் வழிகாட்டியா இருக்கிறவங்க, மிகப் பெரிய தலைவர், இந்த நாட்டில இருக்கின்ற மிகப் பெரிய தலைவர்னு யார்னு கேட்டா எங்கத் தலைவரை கூட சொல்ல மாட்டேன். உங்கள் பேர தான் சொல்றேன்னு சிரிச்சிட்டே சொன்னேன். ஐயோ! நீ ஏன் இப்படிலாம் பேசுற கலைஞரை விடவா நான் பெரிய ஆளு அப்படினுலாம் சொன்னார். அவரு சிம்பிளிசிட்டி சொல்லும் போது நான் சொன்னேன் இது வந்து நான் வந்து சலீம் எல்லார்கிட்டையும் சொன்னேன் MPs கிட்டலாமும் சொல்லிட்டேன்…. நீ கொஞ்சம் கூப்பிட்டு அவங்கள Convince பண்ணேன்னு அப்படின்னாரு, வெளியே வந்து கூப்பிட்டேன். கூப்பிட்டு நேரடியா சொன்னேன். எங்கூர்ல என்னுடையத் தொகுதிலேயே சரசுவதி கோயில், இலட்சுமி கோயில் இன்னொரு கோயில் என்ன? சரசுவதி, லட்சுமி இன்னொரு கடவுள்…? அங்…அங்… பார்வதி கோயில். இந்த மூனு கோயிலையும் என் தொகுதில GST ரோட்ல இப்போ பார்த்தீங்கன்னா கட்டிருப்பாங்க.. அந்த இடத்துல இருந்தது. இந்த மூனு கோயிலையும் நான் தான் இடிச்சேன். எனக்கு ஓட்டு வராதுன்னு தெரியும். ஆனால், ஓட்டு எப்படி வர வைக்கனும்ங்கிறதும் அதுவும் தெரியும் எனக்கு. சோ இந்த ஓட்டு் வராது… வராது …வராது..தயவு செஞ்சு இடிக்காதீங்கன்னு என் தோழர்களெல்லாம் சொன்னாங்க… நான்..எனக்கு வேற வழிக் கிடையாது, இடித்துத் தான் ஆகனும் அவங்களுக்கென்ன வேற கோயில் கட்டிக் கொடுக்கனும் அவ்வளவு தானே. இதவிட பெட்டரா ரொம்ப அழகா எல்லா உட்கார்ந்து ஒரு 100,200 பேர் சாப்பிடற மாதிரி ஏற்பாடு பண்ணி பெரிய மண்டபம் மாதிரி ரொம்ப அழகா செஞ்சுத் தரேன்னு சொல்லி அந்த கோயிலையெல்லாம் இடிச்சுப்புட்டு அடுத்தாப்ல கோயில் கட்டிக் கொடுத்தோம். இதுபோல பல இடங்களில், மத நம்பிக்கைன்னு சொல்லப்பட்ட எல்லாம் convince பண்ணி நான் செஞ்சிருக்கேன். ” எனக் குறிப்பிட்ட டி.ஆர். பாலு இன்னும் பலத் தகவல்களைத் தொடர்ந்து கூறினார்.
அந்த முழுப் பேச்சின் இணைப்பு கீழே உள்ளது.
இந்தக் காணொலியின் பலப் பகுதிகளைத் hindumunnani2.0 வெட்டி ஒட்டி வேறொன்றாகத் திரித்து பரப்புகிறது.
முடிவு:
புதிய தலைமுறை பதிவேற்றம் செய்த காணொலி தான் இந்துமுன்னணி திரித்து பரப்புகின்ற காணொலியின் மூலமாகும். திட்டமிட்டே பொய் பரப்புரைகளை செய்ய வேண்டும் எனும் உள்நோக்கத்துடன் டி.ஆர்.பாலு பேசிய முழு காணொலியைப் பயன்படுத்தாமல் புதிய தலைமுறையின் காணொலியைப் பதிவிறக்கம் செய்து திரித்து பரப்புகிறார்கள் என்பதை The Media Monitoring உறுதி செய்கிறது. இதனை ,பொய் பரப்புரையாக The Media Monitoring வகைமைப் படுத்துகிறது.
முரளிகிருஷ்ணன் சின்னதுரை
முதன்மை ஆசிரியர்.