கூற்று:
மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தெருவில் இறங்கி தங்கள் உரிமைகளை அரசிடம் கேட்க வேண்டும் எனும் உள்ளடக்கத்துடன் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கூறியதாக சமூக ஊடகங்களில் தகவல் பரப்பப்படுகின்றன
சரிபார்ப்பு:
வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் Indian Supreme Court Democracy Zindabad எனத் தலைப்பிடப்பட்டு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டின் படம் இணக்கப்பட்டு ” We are trying our best to save the Constitution of India, democracy of India, but your cooperation is also very important for this, all the people should unite and come out on the streets and ask the government about their rights…this dictatorial government will scare people, threaten but you don’t have to be afraid, keep courage and ask the government to account. I am with you.”
DY Chandrachud(Chief Justice)
எனத் தட்டச்சு செய்தப் படத்தின் கீழுள்ள மொழிபெயர்க்கப்பட்ட சொற்றொடர்களுடன் பரப்பப்படுகின்றன.
நீதிபதி சந்திர சூட் வேண்டுகோள்.
இந்திய அரசியலமைப்பை, இந்திய ஜனநாயகத்தை காப்பாற்ற நாங்கள் எங்களால் முடிந்த அளவு முயற்சி செய்கிறோம், ஆனால் இதற்கு உங்களின் ஒத்துழைப்பும் மிக அவசியம், மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தெருவில் இறங்கி தங்கள் உரிமைகளை அரசிடம் கேட்க வேண்டும், இந்த சர்வாதிகார அரசாங்கம். மக்களை பயமுறுத்துவார்கள், மிரட்டுவார்கள் ஆனால் நீங்கள் பயப்பட வேண்டாம், தைரியமாக இருங்கள், அரசாங்கத்திடம் கணக்கு கேளுங்கள், நான் உங்களுடன் இருக்கிறேன்
- டி.ஒய்.சந்திரசூட் (தலைமை நீதிபதி).
இதன் உண்மைத் தன்மையை ஆராய கூகிள் தேடுபொறியில் ஆராய்ந்த போது, இந்தப் பொய்ச் செய்தி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே பரவி இருக்கிறது. Boomlive, Altnews, Hindustan Times உள்ளிட்ட நிறுவனங்களும் இதன் உண்மைத் தன்மையை சரிபார்த்து பொய்ச் செய்தி என செய்தி வெளியிட்டு இருக்கின்றன.
AltNews
https://www.altnews.in/cji-chandrachud-hasnt-asked-people-to-protest-against-govt-fake-quote-viral
14.08.2023 அன்று உச்சநீதிமன்றமும் அதன் மக்கள் தொடர்பு அலுவலகம் மூலம் செய்தி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுருக்கிறது. அந்தச் செய்தி அறிக்கையில்,
It has come to the notice of the Supreme Court of India that a social media post (invoking the public to protest against authorities) using a file photograph and falsely quoting the Chief Justice India is circulated.
The post is fake, ill-intended and mischievous. No such post has been issued by the Chief Justice of India nor he has authorized any such post.
Appropriate action is being taken in this regard with the law enforcement authorities.
எனக் குறிப்பிட்டிருந்தது.
இந்தியாவின் தலைமை நீதிபதியின் கோப்புப் படத்தை பயன்படுத்தியும் அவரை மேற்கொள் காட்டியும் (மக்களை அரசுக்கு எதிராகப் போராட தூண்டும் வகையில்) பொய்யான பதிவு ஒன்று சமூக ஊடகத்தில் பரப்பட்டு வருவது உச்ச நீதிமன்றத்தின் பார்வைக்கு வந்துள்ளது.
அந்தப் பதிவு பொய்யானது, தவறான நோக்கமுடையது மற்றும் சங்கடத்தை ஏற்படுத்தக் கூடியது. இந்தியாவின் தலைமை நீதிபதி இது போன்ற பதிவினை
தரவோ அல்லது அங்கீகரிக்கவோ இல்லை.
இது குறித்து உரிய சட்ட நடவடிக்கை அதிகாரிகள் மூலம் எடுக்கப்படும்.
என உச்ச நீதிமன்றத்தின் மக்கள் தொடர்பு அலுவலகத்தின் செய்தி வெளியீட்டில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
முடிவு:
மக்கள் ஒன்றிணைந்து தெருவில் இறங்கி உரிமைகள் அரசிடம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கேட்கச் சொன்னதாகப் பரப்பப்படும் தகவல் பொய்யானது என The Media Monitoring உறுதி செய்கிறது
M
முரளிகிருஷ்ணன் சின்னதுரை
முதன்மை ஆசிரியர்