கூற்று:
சௌமியா அன்புமணி தருமபுரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் எனும் முகநூல் பக்கத்தில் சாலையோரம் இருக்கும் பாலத்தின் சுவற்றில் பலர் மாம்பழம் வரைவது போலவும், அவர்கள் வரைவதை மக்கள் திரளாக நின்று பார்ப்பது போல படம் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
சரிபார்ப்பு:
முகநூலில் சௌமியா அன்புமணி தரும்புரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் எனும் முகநூல் பக்கத்தில் சாலையோரம் இருக்கும் பாலத்தின் சுவற்றில் பலர் மாம்பழம் வரைவது போலவும், அவர்கள் வரைவதை மக்கள் திரளாக நின்று பார்ப்பது போல படம் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்ததை காண நேர்ந்தது
மேலும் ஆராய்கையில்,
அப்பக்கத்தின் அறிமுகத்தில் Political Candidate எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், இது தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி பா.ம.க வேட்பாளர் சௌமியா அன்புமணியின் அதிகாரப்பூர்வப் பக்கமா என ஆய்ந்து பார்த்ததில், இது அவரின் அதிகாரப்பூர்வ கணக்கில்லை என்பது தெரிய வந்தது.
இந்தப் பக்கமானது ஜெகன் தருமபுரி எனும் பெயரில் 23 நவம்பர் 2022 அன்று உருவாக்கப்பட்டு, பின்னர் 12, டிசம்பர் 2022 அன்று குருநாதன் எனப் பெயர் மாற்றம் செய்யயப்பட்டது. அப்பக்கத்தின் பெயர் 24 மார்ச் 2024 அன்று சௌமியா அன்புமணி தருமபுரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பகிரப்படும் படத்தை ஆராய்ந்து பார்த்த போது படத்தில் இருக்கும் சில ஊர்திகள் தமிழ்நாட்டில் பயன்பாட்டிலேயே கிடையாது. வேகக் கட்டுப்பாட்டை அறிவுறுத்தும் பலகையில் ‘0’ என எழுதப்பட்டிருக்கிறது.
படத்தில் இருக்கும் பல நபர்களின் உருவங்கள் சிதைவுண்டு இருக்கிறது. இதுபோன்ற சிதைவுகள் செயற்கை நுண்ணறிவு உற்பத்தி முறையில் உற்பத்தி செய்யும் படங்களில் காணாலம். எனவே இப்படம் உண்மையான படமல்ல! செயற்கை நுண்ணறிவு உற்பத்தி தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டப் படம் என உறுதியாக கூறலாம்.
முடிவு:
சௌமியா அன்புமணி தருமபுரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் எனும் பக்கம் பாட்டாளி மக்கள் கட்சியின் தரும்புரி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் சௌமியா அன்புமணியின் அதிகாரப்பூர்வ கணக்கு அல்ல!
சரிபார்ப்புக்கு எடுத்துக் கொண்ட படமும் செயற்கை நுண்ணறிவு உற்பத்தித் தொழில்நுட்பத்தால் உற்பத்தி செய்யப்பட்டது என The Media Monitoring வகைமைப் படுத்துகிறது.
முரளிகிருஷ்ணன் சின்னதுரை
முதன்மை ஆசிரியர்