கூற்று:
தீவிர பிரசாரம்… வாகனத்தில் இருந்து நோன்பு துறந்த திமுக வேட்பாளர் நவாஸ்கனி என X தளத்தில் News18 Tamil Nadu வெளியிட்டப் பதிவு.
சரிபார்ப்பு:
ஏப்ரல் 4 2024, காலை 11.15 மணிக்கு தீவிர பிரசாரம்… வாகனத்தில் இருந்து நோன்பு துறந்த திமுக வேட்பாளர் நவாஸ்கனி என X தளத்தில் News18 Tamil Nadu பக்கத்தில் காணொலி ஒன்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
காணொலியிலும், தீவிர பிரசாரம்… வாகனத்தில் இருந்து நோன்பு துறந்த திமுக வேட்பாளர் நவாஸ்கனி எனத் தலைப்பிடப் பட்டிருக்கிறது.
https://twitter.com/News18TamilNadu/status/1775761519147442558
Archived link (பின்னர் சேர்க்கப்பட்டது)
தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட நவாஸ்கனியின் பிரமானப் பத்திரத்தில் அவரது கட்சியின் பெயர் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் என்றே பதிந்து இருக்கிறார்.
மூலத் தரவு:
Profile of K. Navas Kani in the Election Commision website
காணொலியிலும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சின்னமான ஏணி நவாஸ்கனி அணிந்திருக்கும் துண்டில் கருப்பு சிவப்பு நிறத்துடன் இடம்பெற்றிருக்கிறது.
முடிவு:
தீவிர பிரசாரம்… வாகனத்தில் இருந்து நோன்பு துறந்த திமுக வேட்பாளர் நவாஸ்கனி என X தளத்தில் News18 Tamil Nadu வெளியிட்டு இருப்பது தவறானது. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி என்பதே சரியானது!
இதனை ஆசிரியர் குழுவின் தவறு என The Media Monitoring வகைமைப் படுத்துகிறது.
முரளிகிருஷ்ணன் சின்னதுரை
முதன்மை ஆசிரியர்