Propaganda

X தளத்தில் ANI வெளியிட்ட வைகோ பேட்டி முழுமையானது அல்ல!

கூற்று:
X தளத்தில் கச்சத்தீவு பிரச்னை குறித்து மதிமுக நிறுவனர் வைகோ “காங்கிரசு அந்தக் காலத்தில் தமிழ்நாட்டை எல்லா சூழலிலும் வஞ்சித்தது…” எனக் கூறியதாக ANI செய்தியை வெளியிட்டது

சரிபார்ப்பு:

ANI ஏப்ரல் 3,2024 அன்று மாலை 7:26 மணிக்கு கச்சதீவு குறித்து மதிமுக நிறுவனர் வைகோ அளித்த பேட்டியில் “காங்கிரசு அந்தக் காலத்தில் தமிழ்நாட்டை எல்லா சூழலிலும் வஞ்சித்தது…” எனக் கூறியதாக தனது X தள பக்கத்தில் 10நொடிகள் கொண்ட காணொலியை வெளியிட்டது.அப்பதிவினை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மறுபதிவு செய்திருக்கின்றனர்.

https://twitter.com/ANI/status/1775522655153906052

இதுகுறித்து மேலும் தேடுகையில், சன் செய்திகள் தனது X தள பக்கத்தில் ஏப்ரல் 3,2024, இரவு 9:53 மணிக்கு கச்சத்தீவு விவகாரத்தில் நம்பிக்கைத் துரோகம் செய்துள்ளார் மோடி – மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சனம் எனக் குறிப்பிட்டு 37 நொடிகள் கொண்ட காணொலியைப் பதிவேற்றம் செய்து இருக்கிறது.

அக்காணொலியில் வைகோ “Congress betrayed Tamil Nadu in every front at that time. After that, these 10 years is a testing time for Narendra Modi.He is a traitor. He betrayed Tamil Nadu. He betrayed India. He betrayed Sri Lanka. This is Narendra Modi” எனக் கூறியிருக்கிறார்.

https://twitter.com/sunnewstamil/status/1775559767337132404

இதுகுறித்து உண்மை சரிபார்ப்பு வல்லுநரான முகமது ஜுபேர் ANI செய்தி ஆசிரியரான சிமிதா பிரகாஷை குறிப்பிட்டு, நீங்கள் தான் மதிமுக நிறுவனர் வைகோ நரேந்திர மோதியை நம்பிக்கைத் துரோகி எனக் குறிப்பட்டதையும் மற்றும் தமிழ்நாட்டையும் இந்தியாவையும் வஞ்சித்ததாகக் கூறும் முழுக் காணொலியைப் போட வேண்டாம் என ANI யிடம் கூறினீர்களா? ஏன் வேண்டுமென்றே கத்தரிக்கப்பட்ட காணொலியைப் பதிவேற்றம் செய்கிறீர்கள் என வினாக்குடன் X தளத்தின் ANI பக்க பதிவிலேயே மறுமொழி இட்டு இருக்கிறார்.

https://twitter.com/zoo_bear/status/1775564965153513639

News18 செய்தி நிறுவனமும் Congress has always betrayed Tamil Nadu says DMK – Cong Ally Vaiko on Kachatheevu issue

https://twitter.com/CNNnews18/status/1775576185730179513

News9live இணையத்தள பக்கத்திலும் ‘Betrayed Tamil Nadu on every front’: DMK – Congress ally slams Congress on Kachatheevu issue எனத் தலைப்பிட்டு ANI நிறுவனத்தின் X தள பதிவையே மேற்கோள் காட்டியிருக்கிறது.

https://www.news9live.com/india/betrayed-tamil-nadu-on-every-front-dmk-congress-ally-slams-congress-on-katchatheevu-issue-2487512

இதுபோன்று ஆயிரக்கணக்கானோர் ANIயின் X தள பதிவுகளைப் பகிர்ந்து வருகிறார்கள்.

முடிவு:
ANI என்பது செய்தி முகமை நிறுவனமாகும் (News Agency). அப்படிப்பட்ட செய்தி முகமை நிறுவனம் முழு செய்தியை வெளியிடாமல் கத்திரிக்கப்பட்ட செய்தியை வெளியிட்டதோடு இதற்குப் பிறகும் செய்திகள் இருக்கின்றன என எழுத்துப்பூர்வமாக எங்கும் பார்வையாளர்களுக்குத் தெரிவிக்கவில்லை.

ஆகையால், ANI வெளியிட்ட கத்தரிக்கப்பட்ட வைகோவின் பேட்டியானது முழுமையானது அல்ல! அது உள்நோக்கம் கொண்ட பரப்புரையாக The Media Monitoring வகைமைப் படுத்துகிறது.

முரளிகிருஷ்ணன் சின்னதுரை
முதன்மை ஆசிரியர்

Shares: