கூற்று:
ஒரு நல்ல ஜாதி பின்னணியும் அவருக்கு (தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலைக்கு) இருக்கு என தந்தி தொலைக்காட்சி மொழிபெயர்ப்பில் வெளியான கூற்று.
சரிபார்ப்பு:
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியுடனான நேர்காணலின் தமிழ் தொழிபெயர்ப்பை தந்தி தொலைகாட்சி 31.03.2024 அன்று தனது YouTube பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
தந்தி தொலைக்காடசியின் நெறியாளர்களின் ஒருவரான அசோக வர்ஷினி இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியிடம் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவரான அண்ணாமலையின் செயல்பாடு குறித்தான வினாவுக்கு பிரதமர் நரேந்திர மோதியின் விடையை தமிழில் மொழிபெயர்த்த ஆசிரியர் குழு, காணொலி காலக்கோட்டில் 22:58 இடம்பெறுகின்ற சொற்றொடரை தமிழில் கீழ்கண்டவாறு மொழிபெயர்த்து உள்ளது
“..ஒரு நல்ல ஜாதி பின்னணியும் அவருக்கு இருக்கு…”
இந்த மொழிபெயர்ப்பானது தீண்டாமையை வலியுறுத்தும் சொற்றொடராக இருக்கிறது. மேலும், பிரதமர் நரேந்திர மோதி இந்தியில் குறிப்பிட்டதன் சரியான மொழிபெயர்ப்பு இதுவல்ல!
बहोत बड़ा स्ट्रॉन्ग caste base भी है என்று பிரதமர் மோதி இந்தியில் கூறியதன் சரியான தமிழ் மொழிபெயர்ப்பு
“மிக வலிமையான ஜாதிய பின்னணி அவருக்கு இருக்கு” என்பது தான்.
முடிவு:
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அவர்களின் அண்ணாமலையின் ஜாதிய பின்புலத்தை பற்றி இந்தியில் கூறிய கருத்தை தந்தி தொலைக்காட்சியின் ஆசிரியர் குழு தவறான பொருளில் மொழிபெயர்த்து உள்ளது.
முரளிகிருஷ்ணன் சின்னதுரை
முதன்மை ஆசிரியர்